கிரிஸ்மஸ் வாழ்த்து
விண்மீன்கள் கூட்டத்தினுளொன்றாக ஓர்..
வால்நட்சத்திரமொன்று, வழிகாட்ட
வானத்தில் தோன்றியதோர்ஒளி, அக்கணமே
வந்து பிறந்ததோருயிர், அவ்வுயிரே
.
ஆட்டுத்தொழுவத்திலோர்..
மானுடமாகத் தோன்றி. .
அன்னை மரியாளுக்கு மகனாய்ப் பிறந்து..
அகிலமெங்கும் “மேய்ப்பாரெனப்” புகழுற்றாய்
அன்றுமுதல், இன்றுவரை..
பலூனும் பல்புகளும் ஒன்றோடொன்றுறவாட..
பாலகனும், குழந்தைகளும், விருத்தருடன் மகிழ்ச்சிபொங்க
உன்பிறப்பைக் கொண்டாட வந்ததுதான் “கிரிஸ்மஸ்” பண்டிகை.
வேற்றுமையில் பிளவுற்ற இக்கலியுலகு..
வேற்றுமையில்லாது ஒன்றானது உன்பிறப்பால்
மண்ணுலகைப் பொன்னுலகாக்க..
மரணித்தெழுந்த தேவனே!..
ஒருமுறைதான் உயிர்த்தெழுந்த உனைத்துதிபாட
ஓராயிரம் உயிர்கள் பலமுறை உயிர்தெழுமாம்.
நீவீர், மீண்டுமொருமுறை மீண்டெழ மாட்டீரோவென!.
நினைக்கும் காலம், தகுந்தகாலம் இன்றுதானோ!
டிசம்பர் 25 2016