ஏனோ மெளனம்

சோகமே என் தனிமை கண்டு
விலகி போய்விடு...
தேகமே என் இளமை கண்டு
இளவல் ஆய்விடு...

எங்கு போகும் எந்தன் நினைவு
அன்பு கொண்ட அவ்வுயிரை விட்டு
கலையும் கனவு என்னில் யாவும்
நிலையில் உந்தன் விலகும் முகமே...

பசுமை காணா மரங்கள் மண்ணில்
பசியில் வாடுதே!
புதுமை காணா இதயம் என்னில்
துடிக்க மறுக்குதே!

மெளனம் உரங்கும் உள்ளம் காதல்
மனதை திறந்து வா..!
மெல்ல பறந்து வா..!

உனக்காக ஏங்கும் இதயம் காதல்
காத்திருக்கும் தினமே,,,
கதவை திறந்த மனமே,,,

உயிரோடு தினம் உயிரோடு
அவள்,
அன்பு மனம் உறவோடு...

உருவம் மட்டும் பார்க்கவில்லை
உள்ளம் வரையில் பார்வை
எந்தன்,
உயிரைக் கொண்டு நுழையுதடி

இனியும் மௌனம் இருக்குமென்றால்
துணியும் நேரம் வருகிறதே
மனதின் மெளனம் நீடிக்கவே
மரணம் அனைக்க துடிக்கிறேன்
தொடர்ந்தால்,
இருளில் கரையும் நேரமிது...

உயிர் கொண்ட காதல் அது
உயிரை விட்டு
எங்கே போகிறது?

மெளனம் கொண்ட மனம் இவள்
மடியில் விழவே மழைத்துளியாய்
மேகக் குடையின் கீழே நான்...

உடலை விடுத்து உயிரது
உடனே விண்ணோக்கி பயணிக்கிறது...

என்றோ ஒருநாள் மாறும் மனம்
என்றே ஏக்கம் என் மனமும்
அங்கே உறைகிறது...

எழுதியவர் : கலைவாணன் (26-Dec-16, 8:56 am)
பார்வை : 379

மேலே