நாங்கள்தான் மனிதர்கள்......!
![](https://eluthu.com/images/loading.gif)
நாங்கள்
இவ்வுலகின்
அறிவு ஜீவிகள்,
மேதாவிகள்,
பேரறிஞர்கள்,
புத்திசாலிகள்,
நாங்கள்
சிந்திக்க கற்று கொண்டோம்
செயல்பட கற்று கொண்டோம்
பூமியில்
இப்பொழுது நாங்களே ஆளும் இனம்
மற்ற இனங்களின் வாழ்வுறிமையை
நாங்கள்தான் தீர்மானம் செய்வோம்
நன்மையை மட்டுமே கொடுக்கும்
மரம்,
செடி,
கொடிகளை அழிப்பது எங்களுக்கு
சர்வ சாதாரணம்
பத்து மரங்களை வெட்டுவோம்
அதற்கு பரிகாரமாய் ஒரு செடியை நட்டுவோம்
நாங்கள்
இயற்கையை சீண்டுவோம்
அதற்கு பெயர் அறிவியல்
ஆனால்,
எங்களை இயற்கை சீண்டினால்
பேரழிவு என்று குற்றம் சாட்டுவோம்
எங்களுக்கு இவ்வுலகை அழிக்க
உரிமை உண்டு
ஏனெனில்
பூமியில் நாங்களே ஆளும் இனம்
நாங்கள்
இவ்வுலகின்
அறிவு ஜீவிகள்,
மேதாவிகள்,
பேரறிஞர்கள்,
புத்திசாலிகள்
ஆம்,
நாங்கள்தான்
மனிதர்கள்......!