தன்னை அறிவதே பிரம்ம ஞானம்

இறைவன் எப்போதும் நமது உள்ளுணர்வுகள் மூலம்தான் நமக்குச் செய்திகளைச் சொல்கிறான்..
God will speak only through intuition..
இந்த உள்ளுணர்வுகளை நமக்கு அறிவிக்கும் உள்மனதை தான் Subconscious mind என்று அறிவியலாளர்கள் அழைக்கிறார்கள்...

சாக்ரடீஸ் பெரும் அறிவாளி. தத்துவ ஞானி. அவர் படிக்காத விஷயங்களே இல்லை என்றே சொல்லலாம்..
ஆனாலும், தன் படிப்பு முற்றுப் பெறவில்லை. இன்னும் தெரிந்துகொள்ள வேண்டியது ஒன்று பாக்கி இருக்கிறது.
அது என்ன? என்ற விசாரத்திலேயே ஆழ்ந்த சிந்தனையில் எப்போதும் இருப்பார்.
தன்னை மறந்த நிலையில் இருப்பார்..

தனது மனைவி தேநீர் கொண்டு வந்து குடிக்கும்படி சொல்வது கூடக் கேட்காத நிலையில் ஆழ்ந்த சிந்தனையில் இருப்பார்..
அவர் மனைவி பொறுமை இழந்து தேநீர் கோப்பையை அவர் தலையிலேயே போட்டுவிட்டு போவாராம்..
அதைக் கூட உணர முடியாத அளவுக்கு சிந்தனையில் ஆழ்ந்திருப்பாராம்...

இப்படி அவர் சிந்தனையில் ஆழ்ந்திருக்கும் போது திடீரென ஒருநாள் அவருக்கு ஓர் ஆசரீரியான குரல் கேட்டதாம்...
" Know Thyself, it is Supreme Knowledge. " , என்று அந்தக் குரல் ஒலித்ததாம்...

" தன்னை அறிவதே பிரம்ம ஞானம். ", எனபதே அதன் அர்த்தம்...

அதைக் கேட்டதும் சாக்ரடீஸ் மிகவும் மகிழ்ச்சியடைந்து ஆனந்தக் கூத்தாடினாராம்...

Know Thyself என்பது Delphic Oracle இன் வார்த்தை...
உலகில் இருக்கும் எந்தச் சக்தியையும் மனிதன் கட்டுப்படுத்தி தன் வசப்படுத்துவதற்கு முன் முதலில் தனக்குள்ளேயே இருக்கும் சக்தியைக் கட்டுப்படுத்துவதற்குத் தெரிந்துகொள்ள வேண்டும்..
ஒருவன் தன்னுள் இருக்கும் சக்தியை வசப்படுத்திவிட்டால் தான், அவனால் வெளியில் இருக்கும் சக்திகளை வெற்றி கொள்ள முடியும்...

தினசரி வாழ்க்கையில் மனிதன் தன் மனதை ஒரு சாதாரண கருவியாகத்தான் உபயோகப்படுத்திக் கொள்கிறான்...

இந்த மனக் கருவியை மனிதன் சரியாக உபயோகிக்கத் தெரிந்துகொண்டால் அவன் தனது செயல்பாடுகளில் வெற்றியடைகிறான்...
தன்னிடம் இயற்கையாக உள்ள சக்தியை அறிந்தவனே மற்ற வெளிச் சக்திகளை அடக்கியாள்வான்....

தன்னை அறிவதே பிரம்ம ஞானமென்று மீண்டும் ஞாபகப்படுத்திக் கொள்கிறேன் சகோதர, சகோதரிகளே...

நன்றி...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (26-Dec-16, 9:43 pm)
பார்வை : 739

மேலே