முதல் பார்வை

வாழ்க்கையில் எத்தனையோ பெண்களை
கடந்திருக்கிறேன்
ஆனால்,
பிறப்பின் அர்த்தம் இதுதானா...
பெண் என்பவள் இவள்தானா... இறைவா!..
மங்கை அவள் மாணிக்கம் போல
பளிச்சிடும் இரு விழிகள்,,,,,,,,,
.....தூரம் நின்றேன்.....
உறைந்து போனேன்...
ஒரு நொடியில் கரைந்து போனேன்...

ஒரு பார்வை... ஒரே ஒரு பார்வை...
அந்த..., நிலா... விண்மீன்... மழை... பனி... பூ... குயில்...எதுவுமே....,
ஏன்.....?
அந்த இயற்கையும் கூட....
இன்னும் எதுவாக இருந்தாலும்.....

ஒரு நொடியில் தற்கொலை
செய்துகொள்ளும்.....,

ஏன் தெரியுமா?.....
மனிதனாக பிறக்கவில்லையே என்று....!

அழகா அவள்......... அவ்வளவு அழகு......
அழகே அசந்து பொறாமை கொண்டாலும்
ஆச்சர்யம் ஏதும் இல்லை இங்கே ...

ஆயிரம் பிரம்மன் செய்த தவமாய்
கோடி தேவதை அழகை கொட்டி
விண்மீன் உளிகளால் செதுக்கிய
தேவலோக நங்கை இவளோ....!

அந்த...
பார்க்கடல் மூழ்கிய முத்துச்சிப்பி
பரந்தாமன் பெற்றெடுத்த பேரழகி....

பாதம் அது....
பால் மனம் வீசுதே
தேகம் அது....
தேன் சுவையில் நா கூசுதே...

இடை உடை பேதம் அரியா பேரழகி
நவரத்தின நங்கை இவள்
பொன்னால் பதித்த பொன்மேனி தான்
தக தக தாளம் போடுதே
நடை அது நாட்டியம் ஆடுதே....

சுமக்கும் சுமை அதுவே சுகமெனில்
இந்த பூமியும் சுழல மறுக்குமே
மருதாணி வாசம் வீசும்
இவள் கால்தடம் பதியாமல் போனால்...

காற்றை எல்லாம் கூட்டி வருவேன்
குளிர் பனியில் குளிக்க வைத்து
குமரி கொஞ்சிக்குலவும் இடங்களில் எல்லாம்
அசையாமல் கட்டி வைப்பேன்...

அந்த சூரியனும் நுழையாமல்
கார் மேக போர்வை எடுத்து
போர்த்தி நிற்பேன்....

நான் கடந்த பெண்களில்
உண்மை அவள்
பெண்மையின் சொர்க்கம் தனை
தன்னிடையே தாராளமாய் கொண்டிழுக்கும்
குல விளக்கு...!
இல்லறத்தின் ஒலி விளக்கு...!

எழுதியவர் : கலைவாணன் (27-Dec-16, 4:44 pm)
சேர்த்தது : கலைவாணன்
Tanglish : muthal parvai
பார்வை : 359

மேலே