உன் இதழ் ஈரம்
![](https://eluthu.com/images/loading.gif)
விடி வெளிச்சம் வரும் வரை
விளக்கொளியில் தெரிவது நீ தானடி
உன் கண்ணொளி சேமித்து மின்சாரம் தயாரிக்க விஞ்ஞானிகள் அறியவில்லை
உன் இதழ் ஈரத்தில் சிக்கியது என் இதயமடி
சிப்பிக்குள் முத்து போல் உன் சிரிப்பை என் நெஞ்சுக்குள் சேமித்து வைக்கிறேன்
நின் பாதம் படும் பாதை எங்கும் பார்வை பதிக்கிறேன்
மயிலே உன் வருகை கண்டு என் எண்ண தோகை விரிக்கிறேன்