மறைக்க முயன்ற தமிழின் நாட்காட்டித்தொன்மை
![](https://eluthu.com/images/loading.gif)
மறைக்க முயன்ற தமிழனின் நாட்காட்டித்தொன்மை ..!
உலகெங்கும் நாம் நம் கலாச்சாரத்தோடு வாழ்ந்த அடையாளங்களை எத்தனை பேர் எத்தனையோ காலங்களில் அழிக்க முயன்று முடியாமல் போய்விட்டது.
நம் கலாச்சாரத்தில் ஓர் அங்கமான நம் தமிழ் தேதி கணக்கீட்டு முறைகளை அவர்களது என உரிமை கொண்டாடுகிறார்கள்.
ஆனால் ஆதாரத்தை மறைக்கமுடியவில்லை பாவம்...
நம் ஸ்ரீ சக்கரம் அவர்களின் கடிகாரத்தில்..ஜவீஸ் நாட்காட்டி..
இது தான் உலகின் முதல் நாட்காட்டியாம் மேற்கத்திய மேதாவிகள் கூற்று.
கி.மு 3700 களில் தோன்றியதாம்..
இதில் தான் உள்ளது ஸ்ரீ சக்கரம்..!
நம் கிழமை வரிசையும் ரோமானிய கிழமை வரிசையும் ஒன்று (தற்போதைய ஆங்கில கிழமைகள்)
ரோமானியர்கள் புழக்கத்தில் இருந்த தேதி கணக்கீட்டு முறையை தான் ஆங்கிலேயர்கள் பயன்படுத்தினர்.
இந்த நாட்காட்களின் ஒற்றுமை போதும் நாம் எத்தகைய நிலையில் வாழ்ந்தோம் என்று தெரிகிறது..
மேற்கத்திய நாடுகளின் கூற்று என்னவென்றால்
நம் நாட்காட்டிகள் முதலாம் நூற்றாண்டு அல்லது ஆரியபட்டர் வாழ்ந்த ஐந்தாம் நூற்றாண்டிலோ உருவாக்கம் பெற்றது என்கிறார்கள்.
அவ்வாறெனில்.,
அதற்கு முன் வேதங்கள் புணைந்து பல கலைகளை வளர்த்த நம் முன்னோர்கள் எதை வைத்து நாட்களை நேரத்தையும் கணக்கிட்டுருப்பார்கள்..?
நேரத்தை மனிதனின் நாடியை கொண்டும் ..
மாதங்கள் ..ஆண்டுகள்..
யுகங்கள்.. எல்லாவற்றையும் மனிதனின் நாடி மற்றும் அதர்க்கு ஆதாரமாக விளங்கிய ஆதவனை
சேர்த்து கணக்கிட்ட நம் முன்னோர்கள் இவர்கள் எப்படி அறிந்திருப்பார்கள்..?
ஒருவேளை தெரிந்திருந்தும் மறைத்திருப்பார்களா...?
நம் கடிகாரத்தை கூட அழிக்க முடியாத அவர்களால் நம் வீரம் சார்ந்த ஜல்லிக்கட்டை எப்படி அழிக்க முடியும்...?