இயற்கையின் மேல் கோபம் எனக்கு

பெண்ணே நீ ஒவ்வொரு முறையும் நீ
தலை குனிந்து நடக்கும் போதும் நான் பயப்படுகிறேன்
உன் அழகை கண்டு தரையும் உன்னை காதலித்து விடுமோ என்று ...

நீ கால் நனைக்க வேண்டுமென்றே
தழுவி ஓடுகிறது நதி நீர்
அதனிடம் நான் எப்படி சொல்வேன்
நான் பொறாமை கொள்வதை ......
...
உன் அழகை படம் பிடிக்க
கார் மேக கூட்டங்கள் வரிசையாய் வந்த போதிலும்
நான் வெறுங்கையையோடு தான் நின்றிருந்தேன் ,
நீயோ மேகத்திற்குமுகம் காட்டி நின்றாய் புன்னகையோடு ......
.....
பூ மயில் சிறகினை விடவும்
மெல்லிய உன் கன்னம் தீண்ட வந்த தென்றலையும்
என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை ....
...
தனி ஒருவனாய் என்னால் பொறுக்க முடியவில்லை
......
உன்னோடு உறவாடும் இயற்கையை
நான் வெறுக்கவும் முடிய வில்லை .....
.......
அதனால் நானும்
இயற்கையாய் மாறித்தான் உன்னை சந்திக்க வருகிறேன்
சீக்கிரம் ஓடி வா கட்டித்தழுவிட ..........

எழுதியவர் : ராஜசுதா (29-Dec-16, 11:03 am)
பார்வை : 58

மேலே