எழிலரசி எங்கே

பலா சுளை அமைப்பென
பலர் சூழ இருப்பினும்
நீ இலா நாட்களெல்லாம்
நிழலும் உடன் இல்லாததாயிற்று
கனா கலையாத கண்களில்
ரணம் நுழைந்து உருத்திட
மனம் முழுதும் மங்கை நினைவில்
தினம் தினம் தேய்ந்து தோய்கிறதடி
எழில் அரசியே எங்கேயடி நீ
வழி மறந்தாயோ வந்து சேர
கயல் விழியாளை காணாது
துயில் மறந்தேனடி! துரிதமாய் வா