ஒருதலை காதல்

நான் எத்தனை முறை தூங்கிருப்பேன்
கனவிலாவது உன் விரல் சேரும் என்ற நம்பிக்கையில்...

நான் எத்தனை முறை நடந்திருப்பேன்
உன் இதய கதவுகள் திறக்காதா என்ற ஏக்கத்தில்...

நான் எத்தனை முறை இறந்திருப்பேன்
உன் ஓரப்பார்வைகூட தீண்டாதா என்ற துக்கத்தில்...

நான் எத்தனை முறை தொலைந்திருப்பேன்
நீயே என்னை தேடி தருவாய்
என்ற ஆசையில்...

நான் எத்தனை முறை அழுதிருப்பேன்
உன் விரல்கள் துடைக்க வந்துவிடாதா
என்ற ஆர்வத்தில்...

நான் எத்தனை முறை கண்களால்
பேசிருப்பேன்
உன் விழியாவது என் காதலை உணரும்
என்ற நம்பிக்கையில்...

அன்பே,
நான் எத்தனை முறை உன்னை காதலித்திருப்பேன்...

அதை மட்டும் என் கவிதையில் தேடாதே...
என்னுயிரில் தேடு...
என் சுவாசத்திடம் கேளு...
எந்தன் ஒவ்வொரு
சுவாசிப்பும்
உந்தன் நேசிப்பு மட்டும்தானடி...

எழுதியவர் : ஸ்ரீதேவி (29-Dec-16, 11:33 am)
சேர்த்தது : ஸ்ரீ தேவி
Tanglish : oruthalai kaadhal
பார்வை : 358

மேலே