கவிதைக் கண்கள்

கவிதைக் கண்கள்
அவள் பார்வைகள்
அவன் மீது
பட்டுத் திரும்பியபோது
அவன் உடம்பில்
புது இரத்தமே பாய்ந்தது !
அவன் இதயம்
முழுதும்
கவிதைகள் நிரம்பின !
அவன் வீட்டு மரத்தில்
கூவும் குயிலின்
இனிமையைக்
கேட்கும் போது
அவனுக்குள் இருந்த
கவிதை உற்சாகம் !
அவள் மவுனப்
பார்வையால் அவனை
ஏங்க வைத்தாள் !
வெகு அந்தரங்கமான
அவன் அன்பை
அவளிடத்தில்
சொல்லத்தான் நினைத்து
சொல்லாமலே- அவன்
பூட்டி வைத்தான் !
அன்பானவளே !
அவள் அவனை
வெறுத்த அந்த நாட்களை
சோகக் கவிதைகளில்
கரைத்தான் என்பது
அவளுக்குத் தெரியாது !
இன்றும்
வானவில்லை
மாலையாக வளைத்து
அவன் கைகளில்
அவளை மணம் புரிய
வைத்திருக்கிறான் !
அவள் சிரிக்கும்
மௌனக் கண்களோ
அவனுக்கு
கவிதைக் கண்கள் !
பூ. சுப்ரமணியன்,
பள்ளிக்கரணை, சென்னை