கலங்காதே தோழா

கலங்காதே தோழா

உன் கவலைகளால்
உன் கலை மறக்காதே

தோல்விகளால் துவண்டு போகாதே
கேள்விளால் மரத்து போகாதே

தோல்வி என்னும் கானல் நீரை கண்டு
வெற்றி நோக்கிய பயணத்தை நிறுத்தாதே

உதிர்ந்த இலை உரம் ஆகும்
மண்ணில் விழுந்த விதை மரமாகும்
தோல்விக்கு பின் வரும் வெற்றி என்றுமே நிரந்தரமாகும்

உழைப்பின் பாதையில் சென்றால்
வெற்றியின் விலாசம் நிச்சயம்

எழுதியவர் : பிருந்தா நித்யானந்த் (29-Dec-16, 4:00 pm)
பார்வை : 1035

மேலே