காதல் செய்வோம்

காதல்,
நாளுக்குநாள்
புதுப்புது அர்த்தங்கள் மனதில் !
வா,
நம் உடல் துறப்போம்
உயிர் ஒன்றோடு ஒன்று உறவாடட்டும் !
நீ எனக்குள் தொலைந்துவிடு !
நான் உனக்குள் கரைந்துவிடுகிறேன்!
எவரும் இதுவரை
காணாத அர்த்தங்கள் நாம் காண்போம் !
வாய்க்கு வேலை வேண்டாம் !
நம்மிடையே இடைவெளி வேண்டாம் !
நாம் இருவர் மட்டும்
மௌன மொழியில் காதல் கலப்போம் !
நீ வேறாய்
நான் வேறாய் வேண்டாம் !
நீயும் நானும் இல்லாத எதுவும்
நமக்கு வேண்டாம் !
இரவு விழிக்கும்
அந்திமாலைப் பொழுதினில்
நீயும் நானும் மட்டும்
நெடுந்தூரம் நடப்போம் வா !
உன் கண்பார்வையில் நான்
கருத்தறிய வேண்டும் !
என் கையசைவில் நீ
அதை புரிய வேண்டும் !
யாருமே இல்லாத சில வேளை !
நீ !
உன்னுடன் நான் !
இதுபோல பல நாட்கள் வாழ ஆசை !
வா
காதல் செய்வோம் !

எழுதியவர் : நா.ராம் குமார். (30-Dec-16, 10:45 am)
சேர்த்தது : ராம் குமார்
Tanglish : kaadhal seivom
பார்வை : 197

மேலே