புத்தாண்டு பிறந்தது
புத்தாண்டு பிறந்தது
அன்பும் அமைதியும் அவனியில் வளர்த்திட
ஆசானின் ஆசியால் அறிவு பெருகிட
இன்பமுடன் இல்லறம் நலம்பெற நடந்திட
ஈகைப் பண்பு எல்லோரிடமும் பரவிட
உண்மையும் நேர்மையும் உலகமெங்கும் உயர்த்திட
ஊரெங்கும் உல்லாசமாய் உள்ளங்கள் ஒன்றையொன்று வாழ்த்திட
எளிமையும் மென்மையும் எங்கும் நிறைந்திட
ஏழ்மையின்றி புவியனைத்தும் புன்னகை பூத்திட
ஐயமும் அகந்தையும் இல்லாமல் ஒழிந்திட
ஒற்றுமையால் ஒருகுலமாய் ஊரெல்லாம் ஓங்கிட
ஓதிய கல்வியும் உயரிய நோக்கமும் உயிர்களை இணைத்திட
ஒளடதங்களின் அவசியம் அறவே குறைந்திட
குதூகலமாக குவலயத்தோர் கூடி மகிழ்ந்திட
புத்தாண்டும் வந்ததம்மா புதுப்பொலிவுடனே...