என் எழுதுகோல்

என் எண்ணங்களை நினைவிற் கொண்டு
என்னுடனே உலாவரும் ஒரு பெண்(PEN) உருவம்…

உயிர் மெய் அனைத்தையும்
ஒன்றாக உருக்கி மையாக்கிக் கொண்டு
காகிதங்களில் கபடியாடும் ஒரு வித்தைக்காரி…

சிந்தையில் சிதறும் வார்த்தைகளைப் பொறுக்கி
சித்திரம் வரையும் ஓர் மாயக்காரி...

மதிகெட்டவரைக்கூட மருங்கி மயக்கும்
மண்ணுலகத்தின் மாபெரும் மந்திரக்காரி...

எழுதியவர் : கௌதமன் நீல்ராஜ் (30-Dec-16, 9:09 pm)
சேர்த்தது : கௌதமன் நீல்ராஜ்
Tanglish : en ezhuthukol
பார்வை : 129

மேலே