உங்கள் மனம் ஒரு குழந்தை போலஅதன் தேவையை உணருங்கள்,
வாழு, வாழ விடு - 2.
~~~~~~~~~~~~~~~~~~
இளமையில் தொடங்கி முதுமையில் முடியும் இந்த வாழ்க்கைப்பயணத்தில் இனியவை சில, நினைவில் நிற்பவை பல, நெருட சில, நெகிழ்ச்சியில் சில, வெறுக்கவும் சில, வேதனையில் சில - தினம் தினம் இப்படி மனதினில் அசைபோட்டு திரும்பி பார்க்கக்கூட நேரமில்லாமல் தொய்விலிருந்து மீண்டு தோல்வியிலிருந்து கிளர்ந்தெழ
பக்குவப்படும் அந்த அழற்சியும் சுழற்சியும் என்றுமே தொடரும்.
எனர்ஜி என்பது தினமும் தேவைப்படும் அதை எப்படி நாம் கையாளுகிறோம் என்பதில் தான் நம் முக்கிய இலக்கு இருக்க வேண்டும்.
ஒவ்வொரு உயிரினத்திற்கும் தேவைப்படும் அந்த எனர்ஜி, உத்வேகத்தை கூட்டும், உணர்வுகளை பக்குவப்படுத்தும், உள்நோக்கத்தை ஒவ்வொரு நொடியும் நெறிப்படுத்தும் என்பதால் எந்த அளவு அது தேவை என்பது அவரவரின் மன வளத்தை பொருத்தது.
மன வள மேம்பாடு அதனால் இன்றியமையாதாதொன்றாகிறது.
அதற்கு நாம் என்ன செய்கிறோம் அல்லது செய்யாமல் விட்டு விடுகிறோம் என்பதில் ஒரு ஆழ்மன சீராய்வு அவ்வப்பொழுது தேவைப்படுகிறது.
நட்பு சில நேரம் கைகொடுக்கும் ஆனால் பல நேரம் கை விட்டு விடுகிறது, இன்றைய கால வேகத்தில் ஒருவருக்கொருவர் சார்ந்திருப்பதென்பது எல்லோருக்கும் அமைவதில்லை. அதனாலேயே வெற்று சம்பாஷனைகளுடன் பல நேரம் அரிய சந்திப்புகள் பலனளிப்பதில்லை.
ஒவ்வொருவரின் தனி மனம் நிர்கதியாய் நடு வழியில் நின்று விடுகிறது.
மனம் என்பது ஒரு குழந்தை, அந்த குழந்தைக்கு தினம் தேவைப்படும் போஷாக்கு விளையாட்டு பிரியம் பேரானந்தம் எங்கே கிடைக்கும்?
ஒவ்வொருவரின் தனி வாழ்வில் வயது ஆக ஆக
மனதிற்கு தேவைப்படும் இந்த விஷயங்கள் கிடைக்கப்பெறாமல் ஒரு STRESS உருவாகிறது.
அதிலிருந்து விடுபட RELAX பண்ண அந்த மனம் தனி ஆவர்த்தனம் செய்து படாதபாடு படுகிறது.
கம்ப்யூட்டரில் CATCHE MEMORY என்றும் TEMPORARY FILES என்றும் இருக்குமே அது போல நம் வேகத்தை குறைத்து எழுச்சியைத்தடுத்து அலைக்களிக்கும் மனவாட்டம் - இதை அவ்வப்பொழுது RECYCLE செய்து கொண்டால் போதும்.
வாழ்வது சுகமாகும், வாழ்க்கை சொர்க்கமாகும்,மனம் நலமாகும், மகிழ்ச்சி மனதில் நின்று நிலைக்கும்.
அதற்கு தேவை ஒரு சுய COUNSELLING. எது சரி எது தவறு எது பிழை எது குறை எது குற்றம் எது பாவம் எது தீர்க்கப்பட வேண்டும் இனி எது தவிர்க்கப்பட வேண்டும் என்று உள்மனதில் ஆரோக்கிய பரிசீலனை செய்து சம்பந்தப்பட்ட உறவுகளுடன் நட்புக்களுடன் அல்லது நபர்களுடன் பரி பாஷையில் பகிர்ந்து அடுத்த கட்டம் நகர வேண்டும்.
இது சாத்தியமா? இது வரை எத்தனை முறை இப்படி சுயமாய் யோசித்து முயற்சி செய்துள்ளீர்கள் என்று நீங்களே உங்களிடம் கேட்டுப்பாருங்கள், இல்லை என்னிடம் கேளுங்கள்...பதில் தருகிறேன்.!
- கவிஞர் செல்வமணி, கோவை.