வீட்டில் பூஜை செய்யும் போது சிறு செம்பில் நீர் வைப்பது ஏன்
வீட்டில் பூஜை செய்யும் போது, சிறு செம்பு கிண்ணங்களில் நீர் வைக்கிறார்கள். இதில் புண்ணிய நதிகளின் நீரை நிரப்ப வேண்டும். இதற்கு எல்லாருக்கும் வசதியிருக்காது. எனவே, வீட்டிலுள்ள நிறை குடத்து நீரை, காவிரி, கங்கை, தாமிரபரணி, வைகை போன்ற புண்ணிய தீர்த்தங்களாகக் கருதி பக்தியுடன் நிரப்ப வேண்டும்.
உங்கள் இஷ்ட தெய்வம் அந்த புனிதநீரில் வந்து எழுந்தருள வேண்டும் என உருக்கமாக வேண்டிக் கொள்ள வேண்டும். பூஜை முடிந்ததும் அதை பக்தியுடன் பருக வேண்டும். ஏதேனும் ஒரு சாதம், கல்கண்டு, பழம், வெற்றிலை, பாக்கு படைக்க வேண்டும்.
"ப்ர என்றால் "கடவுள். நாம் படைக்கும் வெறும் சாதம், "ப்ர என்ற கடவுளுடன் சம்பந்தப்படும் போது, "ப்ரசாதம் (பிரசாதம்) ஆகி விடுகிறது. இதை உண்ணும் போதும், பருகும்போதும், நம்மை தீய சக்திகள் அணுகாது. மனோபலம் பெருகும்.