மாட்டையும் தான் ஓட்டிக்கிட்டு

மாட்டையும் தான் ஓட்டிக்கிட்டு மலையோரம் சென்றுகிட்டு கண்ணம்மா
நம் கஞ்சிக்கே ஏர் உழுவோம் கண்ணம்மா கலப்பையை நீ எடுத்துக்கிட்டு வாரம்மா
காலையிலே நெல்லுகுத்தி கருத்துடனே கஞ்சிவைச்ச கஞ்சிகலயம் தானிருக்கு வயலெல்லாம் தூவிடவும் விதைகூடை பெருத்திருக்கு
வாயாடும் மழலையது இடுப்பினிலே தொங்குகையில்
வாயாடும் மாமனவன் கலப்பை வேறு தொங்கனுமோ
வாயடும் பொன் மயிலே பேயாடும் கருங்குயிலே
வாயாட வேண்டாமடி வயலாட வாருமடி
வாயாடும் மாமனவன் வயலை நோக்கி ஓடுமடா
வயலோர வரப்பினிலே கண்மாய் தண்ணீ போகுமடா
கண்மாகரை ஓரம் வந்தா காதல் கரை அரங்கமடி
கழனிகரை நீயும் வந்தா காதலது பாடுமடி
காதலிலே காத்துபோன மாமன் புள்ள மோதலிலே ஜல்லிகட்டில் நீயும் மெல்ல
மங்கையிலே கொள்ளிகட்டை நீ நெஞ்சுக்குள்ளே
பட்டுச்சேலை எடுத்திடவும் வழியுமில்லை சிட்டுசேலை விலகிடதான் வழியிருக்கோ
கொத்துமல்லி மணத்தழகே பட்டுச்சேலை வேண்டாமடி
சிட்டுசேலை போதுமடி
நமக்கேற்ற குணமிருக்க உழைத்திடவும் வழி இருக்க.உழவே தான் கடவுளடி
உழைத்திடவும் வழி இருந்தும்
நமக்கேற்ற குணமிருந்தும்
நாலுகாணி நஞ்சை ஏது
கஞ்சிக்கே வாடுகையில் உழைப்பினிலே ஊக்கமேது
என் உயிரான பூம்பொழிலே சொல்வதை நீ கேளுமேடி
உலகுக்கே சோறுமிட்டும்
உறங்காது நம் மனசு
நாட்டுக்குள்ளே தங்கமெல்லாம் குப்பையான பொருள்தானடி
பசிஎன்று வந்த பின்னே
உழவு தொழில் தங்கமேடி
பசிவரும் காலம்முன்னே பசியாற்றும் குணம் தானடி
உழவனவன் குலம் தானடி