எத்தனைக் கூட்டம்

விடிவெள்ளி முளைக்கும்முன்பே குளிர்நீரில் நீராடி
அங்கம்துளிர சந்தனம்பூசி அர்ச்சனைபாடும் ஐயப்ப பக்தர்கள் கூட்டம்...

ஆடலுக்கு அரசனான வெண்ணையின் வேந்தனை
பாடலுக்கு பரதமாட அழைக்கும் மாடத்து மங்கையர்களின் கூட்டம்...

குலம்சிறக்க வேண்டுமென வைணவர்களெல்லாம் ஒன்றுகூடி
புலம்பெயரா நுழைவாயிலில் குரலோங்க துதிபாடும் கூட்டம்...

ஏகாதசி நாயகனை ஏழுபிறவிகளாய் காணதவர்களுக்கு
மார்கழித் திங்களில் வைகுந்தத்திலேகாண காத்திருக்கும் கூட்டம்...

இதற்கிடையேதான் ஒளிந்துகிடக்கிறது...

வற்றிய குளங்களில் வரண்டுபோன வலைகளில்
வாழ்கையினை இழந்த பல தவளைகள் கூட்டம்...

எழுதியவர் : கௌதமன் நீல்ராஜ் (3-Jan-17, 9:11 pm)
சேர்த்தது : கௌதமன் நீல்ராஜ்
பார்வை : 67

மேலே