விவசாயி - கற்குவேல் பா
உழுவதற்கும்,
மீசை முறுக்குவதற்கும்,
காளை தழுவுவதற்கும்,
வரப்பில் தவறி விழும் அப்பத்தாக்களை
வாரி அள்ளுவதற்கும் மட்டுமே பழகிப்போன
மாயாண்டி விவசாயியின் கைகள்,
ஏதோ ஒரு பட்டணத்து தெருவில் - பணமில்லாத
ஏடிஎம் மையத்தின் கதவுகளை
திறந்து மூடும் பணிக்கு
தன்னை பழகிக் கொள்ள தயாராகலாம்,
ஒரு சான் வயிற்றிற்காக..
#எங்கே_தொலைத்தோம்?