விவசாயி தற்கொலை

வாடிய பயிரை கண்டபோதுலாம் வாடிய வள்ளலார் வழி வந்த எம் விவசாயிகள்
வாடிய பயிரை கண்டு வாடியதோடு மாண்டும் வருகிறார்கள்
அன்று கரைபுரண்டு ஓடிய காவிரித்தாயானவள்
இன்று கண்ணீர் துளி சிந்தி மிதக்கிறாள்
பல அணைகள் தடுத்தும் அதை உடைத்து பாய்ந்தவள் -பொன்னி
ஆட்சி அதிகார சதியால் அணைக்குட நிரப்ப முடியாது தவிக்கிறாள் -பொன்னி

பொன்னியின் தண்ணி பெறாமல் தினம் தினம் செத்து மடியும் பயிர்களை -எண்ணி
கடன் வாங்கி செய்த பயிர்கள் கருகியதை எண்ணி
கடன்காரன் ஏச்சும் பேச்சும் எண்ணி
மானம் காத்து வாழ்ந்த மண்ணை எண்ணி
வீரம் செறிந்து நடந்த மண்ணை எண்ணி

மரியாதையை காக்க தன் உயிரை மாய்த்து சரிகிறான்
தான் உயிரென நேசித்த மண்ணை அணைத்தபடி

முத்தமிட்டு மூச்சையடைத்து மூர்ச்சையடைகிறான்..

எழுதியவர் : மணிவேல்.A (5-Jan-17, 11:14 pm)
சேர்த்தது : மணிவேல்
Tanglish : vivasaayi tharkolai
பார்வை : 375

மேலே