பல விகற்ப பஃறொடை வெண்பா என்றொருநாள் இந்நாட்டில் பெண்ணொருத்தி நள்ளிரவில்

பல விகற்ப பஃறொடை வெண்பா ..
என்றொருநாள் இந்நாட்டில் பெண்ணொருத்தி நள்ளிரவில்
கண்ணிரண்டில் அச்சமின்றி வீதியிலே - பொன்னா
பரணங்கள் பூண்டிருந்து தன்னந் தனியாய்
வருகின்ற வேளையிலே கட்டறுத்துச் சுற்றுமிளங்
காளையர் தன்தமக்கை போலெண்ணு மந்நாளில்
வெற்றி முரசுகொட் டு
05-01-2017