ஏன் இத்தனை விரோதங்கள்
வாழும் வாழ்க்கை ஒருமுறை
அதற்குள் ஏனோ
இத்தனை வன்முறை?
சின்னஞ்சிறிய வாழ்க்கைக்குள்
எத்தனை எத்தனை சண்டைகள்?
எத்தனை எத்தனை விரோதங்கள்?
ஒரு கணம் யோசித்தால்
அத்தனையும் விளங்கும்
வீராப்பும் வீண் என்று!
நெருங்கிய உறவுகளையும்
நெருங்க விடாமல் செய்வது எது?
வுீீண் பிடிவாதம் தானே!
மனதிற்கு பிடித்தவரையும்
மறக்க செய்தது எது?
வீணாய் போன கோபம் தானே!
மண்ணோ? நெருப்போ?
ஏதாவது ஒன்று தின்னும் உடலில்
ஏன் தான் இத்தனை விரோதங்களோ?