மனிதன் நம்மதியாக உறங்கிய தருணங்கள்
அமைத்கியும் பெற வேண்டும்
ஆனந்தமும் அடைய வேண்டும்
இடையூறும் இல்லாமை வேண்டும் !
சுகமான உறக்கம் வேண்டும்
கனவுலகைக் காண வேண்டும்
களிப்புறும் தருணங்கள் வேண்டும் !
இவையாவும் நிலைக்க வேண்டும்
இயலுமாவென எண்ணிடத் தோன்றும் !
நிறைவேறி இருக்கும் எவருக்கும்
மறைக்காது மறுக்காது மனங்களும்
தன்னிலை அறிந்திடாப் பருவமது
செய்கைகள் புரிந்திடாக் காலமது !
சூழலை உணர்ந்திடா நேரம்
சுற்றங்களும் அறியாப் பருவம்
நட்புகள் உருவாகிடாக் காலம் !
தாய் மடியில் தவழ்ந்த தருணங்கள்
தொட்டிலில் உறங்கிய காலங்கள்
தாலாட்டி பாலூட்டி சீராட்டிய
தனைமறந்து உறங்கிய மணித்துளிகள்
மனிதன் நிம்மதியாக உறங்கிய தருணங்கள் !
திரும்பாது எவருக்கும் மீண்டும் அந்நிலை
அரும்பாது அந்நொடிகள் அனைவருக்கும் !
பெற்றிட முடியாது நாம்பெற்ற இன்பங்கள்
வற்றிடாது நெஞ்சில் சுகமான நினைவுகள் !
பழனி குமார்