படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் படத்திற்கு ஹைக்கூ கவிஞர் இரா இரவி

படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் !
படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

மழை பொய்த்தது
கிணற்று நீரும் பொய்த்தது
வேதனையில் விவசாயி !

மலரும் நினைவை
மலர்வித்தது
கிணற்றுக்குளியல் !

நல்ல உடற்பயிச்சி
கிணற்றில்
நீர் இரைத்தல் !

கிணற்றில் இல்லை தண்ணீர்
இரைக்கவும்
ஆள் இல்லை !


கண்களுக்குக் குளிர்ச்சி
மனதிற்கு மகிழ்ச்சி
கிராமியக் காட்சி !

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (8-Jan-17, 9:46 am)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 148

மேலே