கவிதை

கவிதைகள் ஏன்
அப்படி இப்படி என
வரை முறை கொண்டு
வார்த்தை வலை
வீச்சில் சிக்குண்டு
வாசிப்பவனையும்
துச்சமாய்க் கொண்டு
வாரும் முடிவில்
ஏதோ வித்தியாசம் உண்டு
என திறன் விளக்கக்
கட்டுமானம் தாண்டி
எளிதாய் அது அதுவாய்
மலர் விரிதலாய்
மழலைச் சிரிப்பாய்
இருப்பாய் இனிப்பாய்
பா
---- முரளி

எழுதியவர் : முரளி (8-Jan-17, 9:55 am)
சேர்த்தது : முரளி
Tanglish : kavithai
பார்வை : 175

மேலே