எங்கே நீ பெண்ணே
கண் காணா தூரம் நீ போன பின்னே...
கண்ணீரும் என்னுள் காணாது பெண்ணே....
உதிராத பூவோ கனியாக மாறும். ..
மறவாத நினைவோ கனமாகக் கூடும். ...
மழையில்லா காடும், மணமில்லா மலரும்...
இருந்தென்ன லாபம். ..
பூவோடு தேனும், உன் நினைவோடு நானும். ...
இருந்தாலே போதும். ....
சேய் இல்லா தாயோ பாரினில், பாவம். ...
நீ இல்லா நானோ வாழ்கையின் சாபம். ...
விரல் படா பூ என்றும் பூஜைக்கு போகாது....
நீ வரா நாள் என்றும் என் வாழ்வோடு சேராது....
இரவாக நீயும், பகலாக நானும் இணையாது போனோம். .....
கூட்டோடு குயிலும், வாழ்வோடு நாளும் இனி இணையாது போகும். ..