அம்மா

எனக்கென ஒரு உயிரை தொடக்கியதாலோ, உன் பெயரை உயிர் எழுத்தைக்கொண்டு தொடங்கினேனோ..!!
உன் மெய்யின் நடுவில் எனக்கென ஒரு மெய் செய்ததாலோ, மெய் எழுத்துக்களின் நடு எழுத்தைக்கொண்டு உன் பெயரை தொடர்ந்தேனோ..!!
உயிரையும் மெய்யயும் இணைத்து என்னை ஈன்று முடித்ததாலோ, உன் பெயரை உயிர்மெய் எழுத்தைக்கொண்டு முடித்தேனோ..!!

எழுதியவர் : ஆர்கே (9-Jan-17, 10:07 am)
சேர்த்தது : Aarukay
Tanglish : amma
பார்வை : 332

மேலே