மழை விதை

மண்ணில் மூடிய விதையாகத்தான் இருந்தேன்.
மழை போன்ற உன் அன்பு தொட்டு முளைத்தேன்
மனமறியா பொழிந்தேன் என்றால்...?
முளைத்த விதைதான் மீண்டும் விதையாகுமோ..?
இல்லை, முளைத்த விதையை வேருடன் கிள்ளதன் கூடுமோ ...?
முளைத்த விதை மழை அற்றுப்போக ,
வதங்கி ,வளைந்து மீண்டும் மண்ணைத்தொடும்.
இதில் மழை உன் அன்பு ,விதை நான்.

எழுதியவர் : குகு (9-Jan-17, 10:16 am)
சேர்த்தது : குகநாதன்
Tanglish : mazhai vaithai
பார்வை : 150

மேலே