கவி எழுத கூந்தலின் தூது

அவள் கண்கள் தான் கவிகளைத்தந்து
என் மனதைக்கெடுக்கிறது என்று
காணத் துணிவில்லாமல்
அவள் இருக்கும் இடத்தின்
பின் சென்று அமர்ந்தேன்.

அவள் சடைப் பின்னலில் கட்டுண்ட
கூந்தல் முடிகள் சில
அவள் எதிரப்பையும் மீறி வெளிவந்து
காற்றில் கையசப்பதுபோல் என்னை
அழைத்து கவியரங்கத்தில் ஏற்ற முயற்சிக்க
அதை உணர்ந்தவளாய் அவள்
சடையை எடுத்து தோளின் வழியே
நெஞ்சத்தின் மீதுபோட்டுக்கொண்டாள்.
எப்படியும் எனது நினைவுகளை
அவள் நெஞ்சத்துக்கு நினைவூட்டும்
அவளின் அழகு சடை...

நானும் தப்பித்தேன் என்று நினைக்கையில்
அவள் அரைக்கண் பார்வைபோல்
அவள் தோளின் மீது படர்ந்திருந்த
அரை சடை அதன் பின்னலில்
என்னைப் பிண்ணி மலரைவிட
மென்மையான கன்னத்தை பார்க்கவைத்து
காதுகளின் ஓரத்தில் ஒட்டியிருந்த
கம்மலின் அழகையும் காட்டிக்கொடுக்க
இது போதுமென என்னை பார்க்காத
நான் பார்க்கத் தயங்கும் விழிகளிடம்
விடைபெற்று வந்தேன்….
அவள் விழிகளைப்பிரிய மனமில்லாதவனாய்…

எழுதியவர் : சிவராமகிருட்டிணன் (9-Jan-17, 10:07 am)
பார்வை : 119

மேலே