புன்னகைக்க மறந்தவள்

என்றோ எடுத்த புகைப்படத்தை
அவள் தோழிகளிடம் காட்டிச்
புலம்பிக் கொண்டிருந்தாள்…
“இதில் புன்னகைக்க மறந்துவிட்டேன்…
உதட்டினைச் சற்று சுழித்துவிட்டேன்…
புருவங்களை உயர்த்திவிட்டேன்..." என்று.
அந்த புகைப்படத்தில்
தவறவிட்ட முக அசைவுகள் அனைத்தையும்
கொள்ளை அழகுடன் செய்துகாட்டினாள்…
அவள் தவறவிட்டதால்தானே
நான் தவறவிட்ட அவள் முக அசைவின்
அழகினை காணும் வாய்ப்பைப்பெற்றேன்…
நான் அருகில் இல்லா நேரங்களில்
இப்படியே தவறவிட்டுவிடு…
நான் பார்த்து மகிழ்ந்துவிட…


Close (X)

2 (2)
  

மேலே