அவளின் மௌனம்

அவளின் மௌனம், என் மனதை கொய்த ஆயுதம் ..!

ஆம் சட்டென ஒருகணத்தில் என்னை சாய்த்த மௌனம் ...!

இயல்பாகவே என்னை ஈர்த்த மௌனம் ...!

ஈர்ப்பின் பாடசாலை அவளின் மௌனம் ...!

உருத்தெரியாமல் என்னை என்னுள்ளே சிதைத்த மௌனம் ...!

ஊணின்றி என்னை உயிர் வாழ வைத்த மௌனம் ...!

எண்ணிலடங்கா எண்ணங்களை என்னுள் தூவிய மௌனம் ...!

ஏனோ என்னை எழிலாக்கிய மௌனம் ...!

ஐயமின்றி கூறலாம் அழகின் மறுசொல் அவளின் மௌனம் ...!

ஒத்திகையில்லா நாடகம் அவளின் மௌனம் ...!

ஓசையில்லா இன்னிசை அவளின் மௌனம் ...!

ஔவை கவிதை போன்றது அவளின் மௌனம் ...!

அஃறிணையையும் காதல் கொள்ள வைக்கும் அவளின் மௌனம் ...!

- ரபீக் (வடகரை )

எழுதியவர் : அ.முகம்மது ரபீக் (11-Jan-17, 11:09 pm)
சேர்த்தது : முகம்மது ரபீக்
Tanglish : avalin mounam
பார்வை : 323

மேலே