சருகுகள் புன்னகைப்பதில்லை

காய்ந்து உதிர்கின்ற இலைகளாய் வாழ்வின் பிரிவுகள்
மாய்ந்து போகின்ற மனத்துடன் மங்கையின் வாழ்க்கை
ஏய்த்துப் பிழைப்போர் இருக்கும் வரையில் என்றென்றும்
வாய்த்து விடுமா வசந்தமும் நிலையிலாப் பிரிவுகள் .


செந்தமிழின் வாசத்தால் சேர்ந்திடவே விரும்புகின்றேன் .
பந்தமுடன் வாழ்வினிலே பக்குவமாய் நெருங்கிடுவாய் .
தந்திடுவேன் நெஞ்சத்தை தரமான உன்னிடமே .
எந்நாளும் நீயன்றோ என்னுயிரும் நீயன்றோ ?


அந்தநாளின் நினைவெல்லாம் அப்படியே பிம்பமாக
இந்தநாளில் கண்முன்னே இனிமையாகத் தெரிகிறது .
எந்தநாளும் அந்நினைவு எனைவிட்டுப் போகாது .
பந்தத்தின் பண்புமிகு பக்குவத்தின் நன்னாளாம் .


வயதாகிப் போனாலும் வாலிபமே உள்ளத்திலே
பயமின்றி நானும்தான் பார்க்கின்றேன் பாரினையே .
வியப்புடனே நோக்காதீர் விடிவெள்ளி நானேன்பேன் .
முயற்சிதனை மேற்கொண்டே முழுதாக நேசிப்பேன் .


காதலுக்கு அழிவில்லை காதலுக்கு அகவையில்லை
சாதலுக்கு மாற்றாக சாற்றுகின்றேன் காதலினை
மோதல்கள் காதலுக்குள் மோகமுள்ளாய் நின்றுவிடும் .
காதலுள்ளம் மாறிடவே சருகுகள் புன்னகைப்பதில்லை.


ஆக்கம் :- கவிஞர் . சரஸ்வதி பாஸ்கரன்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (11-Jan-17, 11:42 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 54

மேலே