தேனிலவு

நாம் இருவரும்
ஒருவரையொருவர்
புரிந்துக்கொள்ளவே
வான்நிலவு தேன்நிலவானது...

நாம் இருவரும் இதழோடு
இதழ் சேரவே
கொத்து பூக்கள் எல்லாம்
மெத்தை பூக்களானது...

நம் இருவரின்
இதய ஸ்பரிசம்
தொடரவேண்டுமென்றே
இன்ப இரவும் விடிய மறுத்தது...

உன்மடியில் நான்
என் மடியில் நீ
உறங்கி உறங்காமல்
பேசிக்கொண்டபோது
இருளுக்கும் காது முளைத்தது..

உனக்கும் புரியவில்லை
நானும் அறியவில்லை
இதற்கு ஆசானும் இல்லை
ஆனாலும் முடிந்தது அரங்கேற்றம்...

எழுதியவர் : செல்வமுத்து.M (12-Jan-17, 12:05 am)
Tanglish : thenilavu
பார்வை : 219

மேலே