ஓர் ஏழையின் கவிதை

குழந்தையின் மனதில் உண்மையை வைத்தாய்
பெண்களின் மனதில் பொறுமையை வைத்தாய்
ஆண்களின் மனதில் ஆர்வத்தை வைத்தாய்
தாயின் மனதில் கருணையை வைத்தாய்
தந்தையின் மனதில் கண்டிப்பை வைத்தாய்
முதியோர் மனதில் அனுபவத்தை வைத்தாய்
பூவின் உள்ளே தேனினை வைத்தாய்
காதலின் உள்ளே அன்பை வைத்தாய்
தியாகத்தின் உள்ளே வலியை வைத்தாய்
இறைவா! என்னை போன்ற ஏழையின்
வயிற்றில் ஏன் பசியை வைத்தாய் ?