நினைவெல்லாம் என் நிலா

கரைப் புரண்ட வெள்ளமாய்
--நிறைந்து வழியுது நெஞ்சினில்
சிறகிலாப் பறவையும் பறப்பதாய்
--சிறகடித்துப் பறக்குது சிந்தையும்
மதிமுகம் கொண்ட ரதிதேவியே
--நினைத்தாலே உனை எனக்கும் !
மார்கழிப் பனிபோலக் குளிருது
--மாற்றமும் என்னுள் நிகழுது !
மாசற்ற மனங்கவர் மாணிக்கமே
--மாமதுரை மல்லிகை வாசமே
மாட்சிமிகு தோற்றமுள்ள மயிலே
--மானாகத் துள்ளிவா என்னருகே !
உறக்கம் தொலைத்து உலவுகிறேன்
--உன்னை நினைத்தே வாழ்கின்றேன் !
விண்ணைக் கண்டால் உன்னுருவம்
--வியாபித்து நிற்கிறது பேரழகாய் !
மண்ணை நோக்கினால் உன்முகமே
--மலர்ந்தக் கமலமாய் தெரிகிறது !
நிலமடந்தைப் பெற்றெடுத்த நீலாட்சம்
--நிலவுலகம் அளித்திட்ட அழகுசிலை
நிம்மதியும் இழந்தேன் உனக்காணாது
--நித்தமும் அழுகிறேன் நினைத்திட்டே
நிலைக் கொள்ளா நிலைக்குக் காரணம்
--நினைவெல்லாம் என் நிலா நீதானே ......
பழனி குமார்