பெண்ணே

பெண்ணே கேளு,
நீ பவமா அல்லது பா வமா?
அம்மா அப்பாவின் அரசி
தாத்தா பாட்டியின் ராசாத்தி
கணவனின் தோழி
இல்லத்தின் ராணி
உணவின் பவானி
சுகத்தின் மடி
சோகத்தின் சுமைதாங்கி
பிள்ளைகளுக்கு மார்பு
கற்ப்பின் தற்காப்பு
அன்புக்கு அடிமை
பண்புக்கு பொறுமை
மங்கையற்க்கரசி
தங்கச்செல்வி
கவிஞனின் அலங்காரம்
புலவனின் ராகம்
பாடலுக்கு உடல்
பூவின் மடல்
-முபாரக் பேகம்