பார்த்திபா

பார்த்திபா...
அளவில்லா அன்பும்
அளவில் அடங்கா மரியாதையும்
உண்டெனக்கு உன் மீது...

யார் நீ என கேட்கலாம்
விடை இல்லை என்னிடம்
நான் ஒரு வினா - நீ என் விடை
இதுவே நிஜம்...

பார்த்திபனாய் அல்ல பாரதியாகவே நீ
எனக்கு அறிமுகமானாய்....
அன்று முதல் இன்று வரை
நான் பாரதி கண்ணம்மாவாய்.....

தேடி பிடித்து புதிய பாதையில்
உன்னை இனம் கண்டேன்
அது என் பதின்பருவமென்று
நினைக்கிறேன்-ஆம்...

தையல்கார பாண்டியனாய்
பொண்டாட்டி தேவை கண்ணனாய்
பிளாக் அண்ட் வொயிட் டிவியில்
உன்னை கண்டு ரசித்ததுண்டு...

பிடித்தவைகள் பட்டியலில் இருந்து
பிடித்தவனாய் மாறி போனாய் அழகியில்...
தனமாய் நான் வாழ்ந்த நாட்கள்
வாழ்வில் வரமாய் வந்தவை...

உன்னை பற்றி ஏதும் தெரியாமலே
உன்னை எனதாக்கி ஊர் சுற்றிய நாளெல்லாம்
புத்தகம் மறைத்த மயிலிறகாய்
என் மனதோடு மறைந்தாடும்...

சீதையின் மூர்த்தி என்றார்கள் உன்னை
சிறு கலக்கம் கூட எனக்கில்லை
உன் கிறுக்கல்களில் கிறங்கி கிடந்தவள் நான்
இது காதலல்ல அதற்கும் மேலென நானறிவேன்....

நலங்கிள்ளியாய் நீ வந்தாய்
வேறென்ன வேண்டுமெனக்கு
நின்னை சரணடைந்தேன்....
நின்னையே நான் ரசித்தேன்....

உனக்கென எழுதிய
ஒரு நூறு கவிதையோடு
ஒரு நாள் நான் வருவேன்
உயிருள்ள கவிதையே
உன்னை ஒருமுறை வாசிக்க....
-நடிகர் பார்த்திபனுக்காக....

எழுதியவர் : சந்தியா (14-Jan-17, 4:25 pm)
பார்வை : 67

மேலே