மௌனப் பார்வை
பெண்ணே உன் கண்களைப் பார்த்தேன்
அவை உன் உள் மனதை, இதயத்தை
எனக்கு தெளிவாய் காட்டுகின்றனவே
இன்னும் உன் மௌனத்தின் அர்த்தம்
எனக்கு புரியலையே கண்மணியே
நான் தான் உன் மனதில் உள்ளேன்
என்று உன் திருவாயால் கூறிடுவாயா
இதனை, நாள் உன்னைப் பார்த்து மகிழ்ந்திடும்
என் பார்வைக்கு, காதல் பட்டம் அளித்திடுவாயா
எனக்கு உன் காதலன் என்ற பட்டமும்
தந்திடுவாயா ;இன்னும் காத்திருக்க
எனக்கு பொறுமையும் இல்லையே
அறிந்திடுவாய் நீ