மதி கலங்கியவன்
மயில் தோகையின் அழகை மிஞ்சும் கருவிழியோ?
மல்லிகைப்பூ மொட்டை வைத்து அழுத்திய கன்னக்குழியோ?
மஞ்சள் தடவிய மங்கள மலரோ?
மனதினை மயக்கும் சாரல் மழையோ?
மாறாக,
மணம் கமழும் ரோஜாவினால் தொடுத்த மதிற்சுவரோ, மரகதமோ, மழழை தென்றலோ?
மதிகலங்கி நின்றேன்,
மகிழ்ச்சியிலும், மனக்குழப்பத்தில் உன்மேல் நான்.
-இஸ்மாயில்.அ