தமிழனின் வீர பொங்கல் திருநாள்
பொங்கல் திருநாள் ....
ஊருக்கு உழைக்கும் உணவளிக்கும் உழவனின் உழைப்பை
தமிழனின் பெருமையை உலகுக்கு எடுத்துரைக்கும் உன்னத நாளாம் உழவர் திருநாள்...
செங்கரும்பு கட்டி மண்பானை வைத்து பால் பச்சரிசி வெல்லம் இட்டு பொங்கி வழிவதை போல் விவசாயின் வாழ்வில் மகிழ்ச்சி பொங்கும் உன்னத நாளாம் பொங்கல் திருநாள்...
உணவளிக்கும் மண் தாய்க்கும் ஒளி கொடுக்கும் கதிரவனையும் ஏர்தாங்கி உழைத்த மாட்டிற்கும் பொங்கல் படைத்து மரியாதை செய்யும் உன்னத திருநாளாம் பொங்கல் திருநாள்......
வீரம் விளைந்த மண்ணின் மாண்பை வீரத்தை ஏறு தழுவுதலில் துள்ளி வரும் காளையை எதிர் கொண்டு அடக்கும் வீரத் தமிழனின் விரத்தை எடுத்துரைக்கும்
உன்னத நாள்
இனிக்கும் கரும்பு பொங்கும் சக்கரை பொங்கல் போல் அனைவர் வாழ்விலும் இன்பம் பொங்கி ஏற்றம் கொள்ளும் தை திருநாள் பொங்கலை கொண்டாடுவோம் பாரம்பரியம் காப்போம்
பொங்கலோ பொங்கல்
குமா கருவாடு