அவள் வருவாள் என
உன்னை மட்டும் பார்த்து
உயிர்கொடுக்க நினைத்தேன்!
உன் நடையசைவை பார்த்து
உள்ளுக்குள்ளே சிலிர்த்தேன்!
நேற்றிருந்த நேரங்கள் நேற்றோடுமுடியும் - இனி
வருங்காலம் அவள்பெயரை உச்சரித்தே விடியும்!
♦
இதழோரம் அவள் சிரிக்க
இறகெனக்கு முளைக்கிறது!
விழியோடு அவள் பார்க்க
விண்தாண்ட நினைக்கிறது!
நேற்றுதான் நிலவிற்கு அவளோடுசென்றேன் - அங்கு
விண்மீன்கள் முன்னாடி நிச்சயம் செய்தேன்!
♦
வாவென்று நீசொன்னால்
வாழ்க்கையே தருகிறேன்!
போவென்று நீசொன்னால்
புலம்பிக்கொண்டே இறக்கிறேன்!
என்காதல் பதில்சொல்ல அவளிங்கு வேண்டும்-ஜீவன்
அதுவரை உயிரற்ற பிணமாக வாழும்!
♦