வாய்ப்பு

அதோ....அந்த மேகத் தேரின் மீது ஏறித்தான்

கடவுள் பவனி வருவதாக என் பாட்டி சொன்னாள்

அவன் போகும் பல இடங்களில் பூமியும் ஒன்று என்பதால்

நம்மை கவனிக்க கூடிய வாய்ப்பும் கொஞ்சம்தான்

அதோ ! இரண்டு பறவைகள் அந்த மேகத்தையும்

தாண்டி உயர்ந்து செல்கிறது

நிச்சயமாக அந்த பறவையை

தரிசிக்கும் வாய்ப்பு கடவுளுக்கு கிடைத்திருக்கும்

அந்த வின்மீன்களுடன் பேசுகிற வாய்ப்பும்தான்

என்றாவது ஒருநாள் நானும் அந்த கடவுளாக மாறி

மேகத்தின் மீது ஏறி பவனி வருவேன்

ஆனால் இந்த மனிதர்களை என்னால்

கவனிக்க முடியும் என்று தெரியவில்லை

எழுதியவர் : கே.எஸ். கோனேஸ்வரன் (14-Jan-17, 4:48 pm)
சேர்த்தது : கோனேஸ்வரன்
Tanglish : vaayppu
பார்வை : 88

மேலே