தை மகளே வருக வருக
சூரியனுக்கு நன்றி சொல்லிடவும்
தமிழரின் நன்றி மறவாமையை உலகுக்கு எடுத்து காட்டிடவும்
மலந்து வரும் தமிழ் தை மகளே நீ விரைந்து வருக வருக ..
தமிழ் தேசம் எங்கும் விழா கோலம் பூண்டு வரும் தை மகளே.
உழைப்பை உயிராக கொள்ளும் தொழிலாளியின்
அவர்களின் மனங்களில் மகிழ்ச்சி பொங்க பொங்கி பொங்கி வருக வருக ..
ஒவ்வொரு தொழிலாளி தோறும் குறையாத வளம் கொடுத்து
அவை மேலும் பெருகி பூமி எங்கும் பாய்ந்து ஓடிட செய்ய
பொங்கி விரைந்து வருக வருக .தை மகளே ..
கிராமம் தோறும் அமைதியை உருவாக்கி
அதை பூமி எங்கும் பொங்க வைத்து உலகில்
அமைதி தோன்ற வைக்க விரைந்து வருக வருக தை மகளே ..
.