முயற்சி உடையார் இகழ்ச்சி _ _ _ _

ஆரம்பமோ முடிவோ
அனைத்தும் சாதகமே
வெற்றியாளனுக்கு..

இரவோ பகலோ
அனைத்தும் சமயமே
சிந்தனையாளனுக்கு..

வெற்றியோ தோல்வியோ
அனைத்தும் சமமே
முயற்சியாளனுக்கு..

ஆனாலும் கூட,
நாற்களின் நளினமது
நகராது நாணயமாக
நங்கூரமிடுக் காத்திருக்கிறது
அலைந்தோயா அவனின்
அடுத்தடுத்த செயலின்
ஆரம்பத்திற்காக..

அதுவும்,
தன் பங்கிற்கு தோல்விக்கான
சிறப்புத் தேர்ச்சித் தாளின்
வினாக்களை அச்சிட்டப்படி..

பரீட்சையின் பெயர் என்ன தெரியுமா?
முயற்சி உடையார் இகழ்ச்சி அடையாரம்.

அஸ்தீர்.

எழுதியவர் : அஸ்தீர். (14-Jan-17, 11:34 pm)
பார்வை : 273

மேலே