மரணம்

திசைகளின் இதயங்கள் துடிக்கின்றன

இலைகளின் அசைவுகளால் நீங்கள் காண முடியும்

தூரங்கள், காலங்கள் முடிவதற்க்கில்லை என்பதால்

அவைகளின் இதயங்களின் துடிப்புகள் நிற்க போவதில்லை

எத்தனையோ துடிப்புகளின் சோகங்கள்,

மகிழ்ச்சிகள், கோபங்கள், அகங்காரங்கள்

இன்னும் எத்தனை எத்தனையோ

அவைகளுக்கெல்லாம் சாட்சியாய் நிற்கின்றன

வாழ்வின் நீளத்தை கண்டு

நிச்சயம் அவைகள் வருத்தப்பட கூடும்

எனவே என் மரணத்தை நினைத்து

நான் மகிழ்ச்சியே கொள்கிறேன்

எழுதியவர் : கே.எஸ். கோனேஸ்வரன் (15-Jan-17, 10:46 am)
சேர்த்தது : கோனேஸ்வரன்
Tanglish : maranam
பார்வை : 92

மேலே