அன்பு இன்பமிக்க

பொய் சொன்ன
போது
உலகம்
நம்பியது ......

உண்மை சொல்லும்
போது
உலகம்
நம்ப மறுக்கிறது

என்ன ஓர்
விந்தையான
மனோ பார்வை ....

அன்பு செய்கிறோம்
என்பதை கூட
அடையாளத்தோடு
நிரூபிக்க தேடுகிறது
உலகம் ......

தாயிடம் சுயநலம்
தந்தையிடம் சுயநலம்
அண்ணனிடம் சுயநலம்
தம்பியிடம் சுயநலம்
நட்பிடம் சுயநலம்
காதலியிடம் சுயநலம்
எங்கும் சுயநலம்

உறவுகள்
சுயநலத்தில் சுருங்கி
போனதால்
உண்மைகள் நடிப்பானது ...
நடிப்புகள் உண்மையானது .....

கோவில் கருவறையும்
காசுக்குதான் கதவுக்கு
திறக்கிறது
தாய்மை சுகமும்
காசில்தான் உருவாக்க
படுகிறது

அன்புக்கள்
விற்பனை பொருள்
ஆகிவிட
நேசமும் பாசமும்
தோல்வியை
ஒப்புக்கொள்கின்றன ..

நடிக்க தெரிந்தால்
நல்லவன்
உண்மையினை சொன்னால்
கேட்டவன் ....

கூழை கும்பிடும்
குனிந்த நடிப்பும்
கற்று கொண்டால்
தாயும்
தருவாள் சிம்மாசனம் .....

யாரிடமும்
அன்பை தேடி
அன்பை கொடுத்தால்
எதிர்பார்ப்பு தான்
ஏமாளியாக்கும்.........

அலெக்சாண்டர்
என்ன கொண்டு போனான்
ஆண்ட ஜெயலலிதா
என்ன கொண்டு போனார்
ஒன்றும் இல்லை ...

ஆட்சி ,அதிகாரம்
பதவி பணம்
சேனை
எல்லாம்
கானல் நீர்
வித்தைகள் ...

நேசிப்பதில்
சுயநலம் இன்றி
நிற்போம்
இன்று
கோமாளிகளாக
இருப்பதில்
தவறு இல்லை
நாளை வரலாறு ,,,,,கோமாளியாக்கி
விடக்கூடாது

முறைப்பவர் முறைக்கட்டும்
முறுக்குவர் முறுக்கட்டும்
முகம் தூக்குவர் தூக்கட்டும்
மனம் கோணுவர் கோணாட்டும்
நீதிபதி நீதான்

எழுதியவர் : இன்பா (15-Jan-17, 6:57 pm)
பார்வை : 223

மேலே