விவேகானந்தர்

இந்திய திருமகனே.!
ஆதி என்ற சொல்லிற்கு ஏற்ப
முதல் மாதத்தில் பிறந்தாய்..!
சூரியன் என்ற சொல்லிற்கு ஏற்ப விழங்குகின்றாய்..
விவேகத்திற்கு எடுத்துக்காட்டாக
இருக்கின்றாய்...!
அதனால் என்னவோ.. உன் பெயரை விவேகானந்தர்
என்று மாற்றி கொண்டாயோ...??

கம்பீரத்தின் திருவுருவாக
விளங்குகின்றாய்..
அன்று நீ கடவுளை பற்றி
கேட்டுவிட்டாய்..
ஆனால்,
இன்று வரை அந்த கேள்வி
பலரிடம் கேட்க படுகிறது...

உலகம் உருண்டை தான்
அவ்வுருண்டையை
உன் கைக்குள் பற்றியது எப்படி??
உன் பேச்சினாலா?
உன் திறமையினாலா?
அல்லது..
உன் அறினாளா..??

துறவை மேற்கொண்ட நீ
உன் பேச்சை கொண்டு
ஈர்த்தாய்...
பலர் ஈர்ப்பால் உன்னுடன்
இன்று வரை இருக்கின்றனர்..

அன்று நீ என்ன
நினைத்தாயோ தெரியவில்லை..
இன்று உன்னை
எல்லாரும் நினைக்கின்றனர்...

ஆதிக்கு ஒரு அந்தம் உண்டு
உன் வாழ்க்கைக்கு கூட
அந்தம் வந்தது உன்
முப்பத்தி ஒன்பதாவது வயதில்.....

அன்று நீ உனது நிழலில்
நின்றாய்..!!!
இன்று வரை நாங்கள்
உனது நிழலில் வாழந்து கொண்டிருக்கோம் ..!!

வேகம் என்ற சொல்லிற்கு ஏற்ப
வாழ்ந்து விட்டாய்
தலைவனே..!!!

அன்று நீ துறவி ஆனதால்..
இன்று உனக்கு உண்டு ஓர் வரலாறு..
துறவியாய் இருப்பவர்களுக்கு எல்லாம்
வரலாறு இருப்பதில்லை,
வரலாற்றில் இருக்கும் மனிதர்கள்
எல்லாம் துறவியும் இல்லை..!!!

எழுதியவர் : Umadevi.R (15-Jan-17, 9:22 pm)
பார்வை : 203

மேலே