எல்லாம் வயிற்றுக்குத்தான்

எல்லாம் வயிற்றுக்குத்தான் இங்கே
எல்லாம் வயிற்றுக்குத்தான்
இல்லேனு சொன்னீங்கன்னா உங்களுக்கு
சாப்பாடு கிடைக்காதுங்க..
காக்கா குருவி எல்லாம் பறந்து திருஞ்சு
இரைக்காகத்தானே அலைகிறது..
சிங்கம் புலி எல்லாம் பதுங்கிப் பதுங்கி
பசிப்போக்கத்தானே உயிரைஎடுக்கிறது.. (எல்லாம்..)
பசியென்று ஒன்றிங்கே இல்லா விட்டால்
உழைப்பானோ மனுசந்தான்...
வயிறென்று ஒன்றிங்கே இல்லை யென்றால்
தூங்கித்தான் கெடுவானே.. (எல்லாம்..)
கெடுதல் நினைப்பதும் வயிற்றுக்குத்தான்
பிடிங்கித் தின்பதுவும் வயிற்றுக்குத்தான்
ஊழல் பண்ணுவதும் வயிற்றுக்குத்தான்
கம்பி எண்ணுவதும் அதனாலே தான் (எல்லாம்..)
சாமிக்கு அஞ்சுவதும் வயிற்றுக்குத்தான்
காசிக்கு போவதும் வயிற்றுக்குத்தான்
குத்தங்கள் செய்யறானே வயிற்றுக்குத்தான்
என்னைக்குத்தான் திருந்துவானோ மனுசப்பயதான் (எல்லாம்..)