மாற்றி காட்டுவோம்

ஏறு பிடித்தவன்

ஏறுமுகம் கான்பது

எப்பொழுது?


ஏற்றம் இறைத்தவன்

வாழ்வில் ஏற்றம்

வருவது எப்பொழுது?


நாற்றோடு நாற்றாக

சேற்றோடு சேற்றாக

தன்னையும் சேர்த்து

விதைத்தவன் கைகளில்

இன்று விஷ குப்பிகளா ?


எருதுகளின் கயிற்றை

பிடித்தவன் கைகளில்

இன்று தூக்கு கயிறா?


என்ன செய்ய

போகிறோம் நாம்?

இந்த நிலை மாற.

எழுதியவர் : Nizam (16-Jan-17, 2:13 pm)
சேர்த்தது : நிஜாம்
பார்வை : 65

மேலே